பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் ஃபைசல் சுல்தான் தெரிவித்துள்ளார். வீட்டிலேயே இம்ரான் கான் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சுல்தான் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கரோனா உறுதி! - கொரோனா
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இம்ரான் கான்
முன்னதாக நேற்று (மார்ச் 19) இம்ரான் கான் சீனாவின் சைனோஃபார்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தெற்காசிய நாடுகளில் 220 மில்லியன் பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.