வங்கதேசத்தில் நடந்துவரும் டாக்கா பிரீமியர் லீக் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் விளையாடி வருகிறார். நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ' தற்போதைய சூழலில் பாகிஸ்தான் மிகவும் பாதுகாப்பான நாடாக உள்ளது. குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பினை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்புகள், நிச்சயம் பாதுகாப்பாக தான் இருக்கும். தற்போது வங்கதேசத்திலும் நாங்கள் பாதுகாப்பாகவே உணர்கிறோம்' என்றார்.
சில மாதங்களுக்கு முன்னதாக இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட இலங்கை திரும்பியதை, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடினர்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஈஷான் மணி பேசுகையில், ' நாங்கள் பாகிஸ்தான் பாதுகாப்பான நாடு என நிரூபித்துள்ளோம். யாராவது பாதுகாப்பு இல்லை எனக் கூறினால், அவர்கள் பாதுகாப்பு இல்லாததை நிரூபிக்கவேண்டும். இந்தியாவுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தான் பாதுகாப்பில் குறைந்துதான் உள்ளது.