கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பி வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 தொடர் இங்கிலாந்து நாட்டிலுள்ள மான்செஸ்டர் நகரில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.