பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, மழைக்காரணமாக டிராவில் முடிவடைந்தது. அதனையடுத்து கடந்த 19ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசம், அசாத் ஆகியோர் அரைசதம் அடித்ததன் மூலம், முதல் இன்னிங்ஸில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசாத் ஷஃபிக் 63 ரன்களை எடுத்தார். இலங்கை அணி தரப்பில் குமாரா, லசித் எம்புல்டேனியா தலா நாங்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பின் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி சீரான இடைவெளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறா, சண்டிமலின் சிறப்பான அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 271 ரன்களை சேர்த்தது. இதில் தினேஷ் சண்டிமல் 74 ரன்களை விளாசினார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷயீன் அஃப்ரிடி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி காட்டிய பாகிஸ்தான் அணிக்கு டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சதங்களை விளாசி, இலங்கை அணியின் பந்துவீச்சை சுக்குநூறாக்கினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 555 ரன்களைக் குவித்தது.