12ஆவது உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. அதில், பங்கேற்கவுள்ள அணிகளை அறிவிப்பதற்கு ஏப்ரல் 20ஆம் தேதியே கடைசி நாள் என ஐசிசி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பாக 23 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவித்துள்ளது.
இந்த 23 வீரர்களில் இருந்து 15 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த அணியில் சீனியர் வீரர்களான வகாப் ரியாஸ், உமர் அக்மல், அஹ்மது சேஷாத் ஆகியோரின் பெயர்கள் இல்லாமல் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் உமர் அக்மல் தேர்வு செய்யப்பட்டு, சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் நீக்கப்பட்டுள்ளார். இந்த வீரர்களின் தேர்வு முழுக்க உடற்தகுதி அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உத்தேச அணி விவரம் :
சர்வராஸ் அஹமது(கேப்டன்), அபித் அலி, ஆசிஃப் அலி, பாபர் அசாம், ஃபஹீம் அஸ்ரஃப், ஃபக்கர் ஸமான், ஹாரிச் சோஹைல், ஹசன் அலி, இமாத் வாசிம், இமாம்-உல்-ஹக், ஜுனைத் கான், முகமது அபாஸ், முகமது ஆமிர், முகமது ஹஃபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், ஷடாப் கான், ஷாஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், சோயப் மாலிக், உஸ்மான் கான் ஷின்வரி, யாசிர் ஷா.