பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 26ஆம் தேதி கராச்சியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிறைவு செய்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்களை எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஃபவாத் ஆலம் 109 ரன்களை குவித்து, அணியை ஃபாலோ ஆன்-லிருந்து மீட்டார். ஃபவாத் ஆலமின் பேட்டிங் குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், அவரது அர்ப்பணிப்பு மற்றும உறுதிபாடு குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்த வஹாப்பின் ட்விட்டர் பதிவில், “ஃபவாத் ஆலமின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இது அவர் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் உள்ளூர் போட்டிகளில் கொடுத்த கடின உழைப்பின் செயல்திறனை வெளிப்படுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து மேத்யூ வேட் அதிரடி நீக்கம்!