பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவந்த தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி, இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றிபெற்று சமநிலையில் இருந்தன.
தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நேற்று (பிப். 14) லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 85 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது.