தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்றுவந்த உள்ளூர் டி20 தொடரான மசான்ஸி சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டூ பிளேசிஸ் தலைமையிலான பார்ல் ராக்ஸ் அணி, கிளாசன் தலைமையிலான ஷ்வானே ஸ்பார்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற பார்ல் ராக்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து களமிறங்கிய ஸ்பார்டன்ஸ் அணியில் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார்.
இதன்மூலம் ஸ்பார்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 51 ரன்களை சேர்த்தார். ராக்ஸ் அணி சார்பில் இசுரு உதானா, ஷம்சி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.