தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘உமிழ்நீர் குறித்து ஐசிசி விதித்த தடை இடைக்கால நடவடிக்கை’ - அனில் கும்ளே! - அனில் கும்ளே

கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி தற்போது விதித்துள்ள உமிழ்நீர் தடையானது இடைக்கால நடவடிக்கை மட்டுமே என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கமிட்டி தலைவருமான அனில் கும்ளே தெரிவித்துள்ளார்.

Only an Interim measure: Anil Kumble on saliva ban
Only an Interim measure: Anil Kumble on saliva ban

By

Published : May 24, 2020, 7:22 PM IST

Updated : May 24, 2020, 7:34 PM IST

கிரிக்கெட்டில் பந்துகளை பளபளக்கச் செய்வதற்காக பந்துகளில் கிரிக்கெட் வீரர்கள் உமிழ்நீர் தடவுவது வழக்கம். அவ்வாறு தடவுவதால் பந்துகளை ஸ்விங் செய்வதற்கு உதவி செய்யும். இதனால் பந்துகளை வைத்து இன்னும் சிறிது நேரம் ஸ்விங் செய்யலாம். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பந்துகளில் உமிழ் நீரை பயன்படுத்த வேண்டாம் என ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கமிட்டியின் தலைவருமான அனில் கும்ளே தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், "இது ஒரு இடைக்கால நடவடிக்கை மட்டுமே. மேலும் இப்பிரச்னையானது சில மாதங்களில் அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவே மாறிவிடும். கரோனாவின் பாதிப்பு குறைந்தால் உமிழ்நீருக்கான தடை விரைவில் நீக்கப்படும்.

நாம் மீண்டும் இவ்விளையாட்டை உயிர்தெழ வைப்பதற்கு இதனை செய்துதான் ஆகவேண்டும். மேலும், இவ்விளையாட்டை மீண்டும் சர்வதேச அரங்கில் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஐசிசி தற்போது மேற்கொண்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க:இங்கிலீஷ் பிரீமியர் லீக்: மேலும் 2 வீரர்களுக்கு கரோனா வைரஸ்...!

Last Updated : May 24, 2020, 7:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details