இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி கடந்த 14-18ஆம் தேதிகளில் கலேவில் நடிப்பெற்ற இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் சர்ச்சைகுரிய முறையில் பந்து வீசியதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தனஞ்சயா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து போட்டி அலுவலர்களின் அறிக்கையில், இரு வீரர்களின் பந்துவீச்சு நடவடிக்கைகளின் சட்டபூர்வமான தன்மை குறித்த குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், 14 நாட்களுக்குள் இரு வீரர்களும் பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், சோதனைகளின் முடிவுகள் அறியப்படும் வரை, இவர்கள் தொடர்ந்து பந்துவீச்சுக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன் இந்த இரு வீரர்களும் பந்துவீச்சு சர்சையில் சிக்கியுள்ளனர். இதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்ச்சைகுரியப் முறையில் பந்துவீசியது காரணமாக பந்துவீச தடை செய்யப்படிருந்தார். இலங்கை அணியின் அகில தனஞ்சயா 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பந்துவீச்சு சர்ச்சையால் தடைசெய்யப்படிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.