தமிழ்நாடு

tamil nadu

உலகக் கோப்பை 'ரீவைண்ட்': வாட்சனுக்கு மரண பயம் காட்டிய வஹாப் ரியாஸ்!

கடந்த உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனுக்கு அபாராக பந்துவீசி மரண பயம் காட்டி இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அது குறித்து சிறப்பு தொகுப்பு.

By

Published : Mar 20, 2019, 8:47 PM IST

Published : Mar 20, 2019, 8:47 PM IST

Updated : Mar 21, 2019, 10:54 AM IST

வாட்சன் ரியாஸ்

2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரில் பல சுவாரஸ்யங்கள் நிகழ்ந்திருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸின், அற்புதான பந்துவீச்சு ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் நிபுணர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது என்றே கூறலாம்.

அடிலெய்டில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 213 ரன்களுக்கு சுருண்டது. இதைத்தொடர்ந்து, 214 ரன் இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு, பாகிஸ்தான் அணி தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் தொடர்ந்து அச்சுறுத்தலை தந்தது.

குறிப்பாக, அந்த அணி 10. 4 ஓவர்களில் 59 ரன்களுக்கு மூன்று முக்கிய புலிகளின் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. அப்போது களத்தில் வந்த ஆஸ்திரேலிய வீரர் வாட்சனிற்கு பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் பந்து வீசினார். கிரிக்கெட்டில் அது ஒரு தரமான சம்பவம் என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அடிலெய்டு மண்ணில் ஷார்ட் பிட்ச், பவுன்சர் பந்துகளை வீசி வாட்சனை திணறடிக்கச் செய்தார் வஹாப் ரியாஸ். அத்துடன் வாட்சனிடம் கைகளை தட்டி, எங்கே முடிஞ்சா... பந்தை தொடுடா பார்க்கலாம்.. என்பது போல ஸ்லெட்ஜிங் செய்தது அவரை உசுப்பெத்தியதுதான் அந்தப் போட்டியில் நிகழ்ந்த சிறப்பான செம்மையான சம்பவம்.

வஹாப் ரியாஸ் வீசிய அதிகமான பந்துகளுக்கு வாட்சனால் பதில் அளிக்க முடியாமல் தலை குனிந்து, பந்துகளை எல்லாம் விட்டுவிட்டார். அதில் ஒரு சில பந்துகள் வாட்சனின் முகத்தை பதம் பார்த்திருக்கும். இவ்விரு வீரர்களுக்கு இடையே நடந்த இந்த காரசாரமான நிகழ்வை வர்ணணையாளர்களும் தங்களது இனிய குரலில் அழகு சேர்த்தனர்.

வஹாப் ரியாஸின் ஒரு சில பந்துகளை வாட்சன் பவுண்டரி அடித்திருந்தாலும், பாகிஸ்தான் வீரர்களின் மெத்தனமான ஃபீல்டிங்கினால் வாட்சன் பல முறை அவுட் ஆகுவதில் இருந்து எஸ்கேப் ஆனார். அவர் மட்டுமின்றி அதிரடி வீரர் என பெயர்போன மேக்ஸ்வெலும் இதே கதி நடந்துதான் அல்டிமெட் ஹைலைட்.

வஹாப் ரியாஸின் பந்துவீச்சுக்கு பாகிஸ்தான் அணியினர் ஃபீல்டிங்கில் ஒத்துழைத்திருந்தால், ஆஸ்திரேலிய அணி காலிறுதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கும். வஹாப் ரியாஸின் ஆக்ரோஷமான செயலுக்கு ஐசிசி அபராதம் விதித்திருந்தாலும், அதை நான் செலுத்துகிறேன் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாரா அறிவித்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்று தொடரையும் வென்று அசத்தியது. ஸ்லெட்ஜிங்கில் பெயர்போன ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த ஒரு தருணம் வஹாப் ரியாஸ் தண்ணிக் காட்டினார். இந்நிகழ்வை நினைவுக்கூறும் விதமாக ஐசிசி வஹாப் ரியாஸ், வாட்சனுக்கு வீசிய பந்துவீச்சு வீடியோவை ட்வீட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Last Updated : Mar 21, 2019, 10:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details