தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒருநாள் போட்டியில் சச்சின் மைல்கல்லை எட்டிய நாள் இன்று!

ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 10,000 ரன்களைக் கடந்து இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

On This Day Sachin Tendulkar reached the ODI milestone of 10k runs, வரலாற்றில் இன்று ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 10000 ரன்களை கடந்தார்
On This Day: Sachin Tendulkar reached the ODI milestone of 10k runs

By

Published : Mar 31, 2021, 12:35 PM IST

Updated : Mar 31, 2021, 12:52 PM IST

டெல்லி: கடந்த 2001ஆம் ஆண்டு இந்தூரில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் 10,000 ரன்களைக் கடந்து இந்த சாதனையை நிகழ்த்தினார்.

’மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் அந்தப் போட்டியில் 139 ரன்களைக் குவித்து, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். அவர் ஒருநாள் போட்டியில் தனது 259ஆவது இன்னிங்சில் இச்சாதனையைப் படைத்தார் என்பது கவனிக்கத்தக்கது.

463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், 49 சதங்கள், 96 அரை சதங்கள் என 18,426 ரன்களைக் குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் சச்சின் படைத்துள்ளார். டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 34,357 ரன்களை சச்சின் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2021: டெல்லி அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த்

Last Updated : Mar 31, 2021, 12:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details