கிரிக்கெட்டிலிருந்து இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றாலும், இன்றும் அவரது பேட்டிங்கைப் பார்த்தால் பழைய நினைவுகள் எல்லாம் மீண்டும் நியாபகத்துக்குவரும். அதன் ஒருபகுதியாக, 11 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் (அக்.17) ரசிகர்களுக்கு சிறந்த தருணத்தை வழங்கியுள்ளார்.
ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2008ஆம் ஆண்டில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்றது.
இப்போட்டியில் சச்சின் 15 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கனிந்திருந்தது. 13 ரன்கள் எடுத்திருந்த சச்சின் ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சீடிலின் பந்துவீச்சை தெர்ட் மென்(Third man side) திசைக்குத் தட்டிவிட்டு மூன்று ரன்கள் ஓட ஒட்டுமொத்த மைதானமே கரகோஷம் எழுப்பியது.