தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக்கோப்பையில் முதன்முறையாக ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள்: யுவிக்கு முன் கிப்ஸ் நிகழ்த்திய மேஜிக்! - கிப்ஸ் நிகழ்த்திய மேஜிக்

உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ந்து ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹெர்செல் கிப்ஸ் படைத்து 13 ஆண்டுகள் நிறைவடைந்தன.

on-this-day-herschelle-gibbs-smashes-6-sixes-in-an-over
on-this-day-herschelle-gibbs-smashes-6-sixes-in-an-over

By

Published : Mar 17, 2020, 8:59 AM IST

கிரிக்கெட்டில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள் அடிப்பது என்பது அதிசயத்திலும் அதிசயமாகப் பார்க்கக்கூடிய சாதனையாகும். அந்தவகையில், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கெரி சோபர்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர். ஆனால், ஒருநாள் போட்டிகளில் நீண்ட ஆண்டுகளாக இச்சாதனை படைக்காமலே இருந்துவந்தது. இந்தத் தருணத்தில், 2007இல் உலகக்கோப்பை ஒருநாள் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது.

இதில், நெதர்லாந்து அணிக்கு எதிராக செயின்ட் கிட்ஸ், நெவல்ஸ் வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்தான் அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார் தென் ஆப்பிரிக்க வீரர் ஹெர்செல் கிப்ஸ். ஆட்டத்தின் 30ஆவது ஓவரை நெதர்லாந்து அணியின் லெக் ஸ்பின்னர் டான் வன் பங்கே வீசினார்.

அப்போது களத்திலிருந்த கிப்ஸ், மிட் விக்கெட், ஸ்கொயர் லெக், லாங் ஆஃப், லாங் ஆன் என தொடர்ச்சியாக அந்த ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி அதகளப்படுத்தினார். இதன்மூலம், சர்வேத ஒருநாள் போட்டிகளிலும், உலகக்கோப்பைத் தொடரிலும் தொடர்ந்து ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மழை காரணமாக 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 221 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. இதில் கிப்ஸ் 40 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், ஏழு சிக்சர்கள் என 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.

உலகக்கோப்பையில் கிப்ஸ் இந்த மேஜிக் நிகழ்த்தி இன்றோடு 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவருக்குப் பிறகு அதே ஆண்டில் இந்தியாவின் யுவராஜ் சிங் டி20 போட்டியில் இச்சாதனை படைத்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

இதையும் படிங்க:உலக கிரிக்கெட் வரலாற்றில் யுவி நிகழ்த்திய மேஜிக்; நாஸ்டால்ஜிக் மெம்மரிஸ் ரீவைண்ட்..! #OnThisDay ❤

ABOUT THE AUTHOR

...view details