துபாயில் கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியின்போது, சக வீரர்களை மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடவைக்க முயற்சித்ததாக ஓமன் கிரிக்கெட் வீரர் யூசஃப் அப்துல் ரஹிம் அல் பலூஷி மீது புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், தன் மீது எழுந்த புகாரை அவர் ஒப்புக்கொண்டார். ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறி அவர் நடந்துகொண்டதால் ஐசிசி அவரை அனைத்துவிதமான போட்டிகளில் பங்கேற்க ஏழு ஆண்டுகள் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.