தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒத்த ரன் மேல இம்புட்டு பாசமா..? - ஷாக் கொடுத்த இந்திய டாப் ஆர்டர்! - உலகக்கோப்பை

மான்செஸ்டர்: நியூசிலாந்து எதிராக 240 ரன் இலக்கை எதிர்த்து ஆட வந்த இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் 1 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.

கோலி

By

Published : Jul 10, 2019, 4:26 PM IST

உலகக்கோப்பையில் அரையிறுதி ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்து இந்திய அணிகள் மோதின. கனமழை காரணமாக ஆட்டம் முதல் இன்னிங்ஸ் கூட ஆட முடியாமல் போனது. மேலும் மழை தொடர்ந்ததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இன்று 3 மணிக்குத் தொடர்ந்தது.

ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் முடிவில் 239 ரன்கள் எடுத்திருந்தது. 240 என்ற எளிய இலக்கை நோக்கி ஆட வந்த இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. உலகக்கோப்பை தொடரில் அதிக சதமடித்த தொடக்க வீரர் ரோஹித் சர்மா 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சளித்தார். இதில் இருந்து மீள்வதற்குள் கோலி 1 ரன்னில் எல்பிடபிள்யு ஆகி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி கொடுத்தார்.

போல்ட்

ரசிகர்கள் ரோஹித் மற்றும் கோலியின் மேல் கொண்ட கோபம் தீரும் முன்னே ராகுலும் சொல்லி வைத்தது போல 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். இப்போது களத்தில் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கும் இளம் வீரர் பண்ட்டும் ஆடி வருகின்றனர். இவர்கள் விக்கெட் இழக்காமல் நிதனமாக ஆடினால் மட்டுமே கோப்பையின் விளிம்பைக் கூட நினைத்துப் பார்க்க முடியும். சிறப்பாகப் பந்து வீசிய போல்ட் 1 விக்கெட்டும் ஹென்றி 2 விக்கெட்களும் கைப்பற்றினர்.

ABOUT THE AUTHOR

...view details