தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியாவுக்குத் தொடக்கம் கொடுக்கும் அறிமுக வீரர்கள் - டாஸ் வென்ற நியூசி. பந்துவீச்சு தேர்வு! - ப்ரித்வி ஷா - மயாங்க் அகர்வால்

ஹாமில்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

nzvind-nz-won-the-toss-and-choose-to-field
nzvind-nz-won-the-toss-and-choose-to-field

By

Published : Feb 5, 2020, 7:27 AM IST

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஹாமில்டனில் தொடங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதால், இந்திய அணிக்கு புதிய தொடக்க ஜோடியாக ப்ரித்வி ஷா - மயாங்க் அகர்வால் இணை களமிறங்கவுள்ளது. நீண்ட நாள்களாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ஜாதவ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். கேஎல் ராகுல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கவுள்ளார். டி20 தொடரில் சாஹல் ஆடியதால், ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவ் களமிறக்கப்பட்டுள்ளார்.

மயாங்க் அகர்வால் - ப்ரித்வி ஷா

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் காயம் காரணமாக வில்லியம்சன் விலகியதால், டாம் லாதம் கேப்டன்சியை மேற்கொள்கிறார். அவருக்குப் பதிலாக டாம் ப்ளெண்டல் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி விவரம்:விராட் கோலி (கேப்டன்), ப்ரித்வி ஷா, மயாங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஜாதவ், பும்ரா, தாகூர், ஜடேஜா, குல்தீப், ஷமி.

நியூசிலாந்து அணி விவரம்:டாம் லாதம் (கேப்டன்), கப்தில், நிக்கோலஸ், டாம் ப்ளெண்டல், ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், கிராண்ட்ஹோம், மிட்சல் சாண்ட்னர், டிம் சவுதி, இஷ் சோதி, ஹமீஷ் பென்னட்.

இதையும் படிங்க: யு19 உலகக் கோப்பை: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம்... பாகிஸ்தானை பந்தாடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details