நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வருபவர் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன். இவரது தலைமையின் கீழ் நீயூசிலாந்து அணி கடந்த உலகக்கோப்பைத் தொடரில் நூழிலையில் கோப்பையை நழுவவிட்டது.
இதனையடுத்து இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது. இந்நிலையிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வில்லியம்சனை டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கியதாக தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் அது தவறான தகவல் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறுகையில், கேன் வில்லியம்சனின் கேப்டன்சி பற்றிய கவலை எங்களுக்கு இல்லை. அதனால் அவர் தொடர்ந்து நியூசிலாந்து அணியை வழிநடத்துவார். அவரைப் பற்றி தற்போது வெளிவந்த தகவல்கள் முற்றிலும் தவறான ஒன்றாகும். அவரை நாங்கள் கேப்டன் பதவியிலிருந்து விலக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரராக வலம் வரும் வில்லியம்சன், இதுவரை 300க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் களமிறங்கி 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பந்துகளில் சானிடைசர்; ஐசிசியிடம் அனுமதிகோரும் ஆஸி.!