நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிச.26) மவுண்ட் மாங்குனியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதன் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை எடுத்தது. தொடர்ந்து இன்று (டிச.27) இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்-நிக்கோலஸ் இணை, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
இதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 22ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹென்ரி நிக்கோலஸும் அரைசதம் கடந்தார்.
பின்னர் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிக்கோலஸ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அவரைத்தொடர்ந்து கேன் வில்லியம்சன்னும் 129 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.