நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. இதன் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய 0-2 என நியூசிலாந்திடம் தொடரைப் பறிகொடுத்தது. இந்தத் தோல்விக்குப் பின், இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசுகையில், '' இரண்டு போட்டிகளும் ரசிகர்களுக்கு நல்ல போட்டியாக அமைந்தது. இரண்டாவது போட்டியின் பந்துவீச்சின்போது, கடைசி நேரத்தில் நியூசிலாந்து அணி விரைவாக ரன்கள் சேர்த்தது. அதேபோல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தாதபோது ஜடேஜா - சைனி சிறப்பாக போராடினர். ஸ்ரேயாஸ் ஐயர் நன்றாக ஆடினார்.
ஒருநாள் தொடரை இழந்தது பற்றி பெரிதாக கவலையில்லை. ஏனென்றால், எங்களது கவனம் முழுக்க டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தான் உள்ளது. ஆனால், ப்ரஷர் நேரங்களில் வீரர்கள் எழுச்சிபெறுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.