இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழும் இஷாந்த் ஷர்மாவுக்கு கடந்த மாதம் டெல்லி - விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியின் போது கணுக்காளில் காயம் ஏற்பட்டது. இதனை ஸ்கேன் செய்தபோது, காயம் தீவிரமாக இருந்தது கண்டறியப்பட்டதால் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, காயத்திலிருந்து மீண்ட இஷாந்த் ஷர்மா நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுருந்தார். இருப்பினும், அவர் தனது உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் அவர் தேர்ச்சிபெற்றதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இன்று வெலிங்டன் புறப்படவுள்ளார். இதைத்தொடர்ந்து, அவர் நாளை இந்திய அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.