தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வில்லியம்சனுக்குப் பதிலாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள ஹாங் காங் வீரர்! - மார்க் சாப்மேன்

ஹாமில்டன்: இந்திய அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

nz-vs-ind-injured-kane-williamson-ruled-of-first-two-odis
nz-vs-ind-injured-kane-williamson-ruled-of-first-two-odis

By

Published : Feb 4, 2020, 12:27 PM IST

நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது. முன்னதாக நடந்த டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விலகினார். அவருக்குப் பதிலாக நியூசிலாந்து அணியை டாம் லாதம் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்க் சாப்மேன்

தற்போது காயம் சரியாகததால் இந்திய அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார். தற்போது இவருக்குப் பதிலாக மார்க் சாப்மேன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவர் ஹாங்காங் அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர். இவர் இந்தியா ஏ அணிக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து ஏ அணிக்காக ஆடியபோது, சதம் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

வில்லியம்சன் எப்போது பயிற்சிக்குத் திரும்புவார் என கேட்கையில், ''தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து வில்லியம்சன் விலகியுள்ளார். அவருக்கு உடலைப் பரிசோதனை செய்கையில், காயம் பலமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஓய்வு எடுத்தால் வேகமாகக் களத்திற்குத் திரும்பிவிடலாம். வெள்ளிக்கிழமை தனது பேட்டிங் பயிற்சியைத் தொடங்குவார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் டாம் லாதம்

நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐசிசி டி20 பட்டியலில் டாப் 2-க்கு முன்னேறிய கே.எல். ராகுல்!

ABOUT THE AUTHOR

...view details