இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் லூக் ரோஞ்சி ஃபீல்டிங் செய்துள்ளார்.
37ஆவது ஓவரின்போது சைனி மிட் ஆனில் அடித்த பந்தை ரோஞ்சி எடுத்து வீசியபோது பயிற்சியாளர் ஃபீல்டிங் செய்த சம்பவம் ரசிகர்களுக்கு தெரிய வந்தது. இந்தக் காரணம் குறித்து அறிய முற்படுகையில், நியூசிலாந்து அணியில் ஏற்கெனவே வில்லியம்சன் காயம் காரணமாக விலகினார். முதல் போட்டிக்குப் பின் பந்துவீச்சாளர்கள் ஸ்காட் கூகளின் காய்ச்சல் காரணமாகவும், சாண்ட்னர் வயிற்றுப்போக்கு காரணமாகவும் போட்டியிலிருந்து விலகினர். ஃபீல்டிங் செய்வதற்கு மாற்று வீரர்கள் இல்லாததால் அணியின் பயிற்சியாளரே ஜெர்சி அணிந்து களமிறங்கியதாகத் தெரிய வந்துள்ளது.