நியூசிலாந்து - இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியது. இப்போட்டியில் களமிறங்கியதன் மூலம் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி புதிய சாதனைப் படைத்துள்ளார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான ஃபார்மெட்களிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையையும் ராஸ் டெய்லர் படைத்திருக்கிறார். நியூசிலாந்து அணிக்காக இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராஸ் டெய்லர், 19 சதங்கள், 33 அரை சதங்கள் உள்ளிட்ட 7 ஆயிரத்து 147 ரன்களை குவித்துள்ளார்.
அதே வேளையில் 231 ஒருநாள் போட்டிகளில் 8570 ரன்களையும் இவர் எடுத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலும் அதிக ரன்களைக் குவித்த நியூசிலாந்து வீரராக உள்ளார். இது தவிர 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய டெய்லர், ஆயிரத்து 909 ரன்களை எடுத்திருக்கிறார்.