ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிப்படவில்லை. இதனால் சிட்னி மைதானம் ரசிகர்களின் ஆரவாரமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ரசிகர்கள் மைதானங்களில் இல்லாததால் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் சிக்சர்களை கேலரிக்குள் சென்று வீரர்களே எடுத்துவரும் நிலை ஏற்பட்டது. ஆனால் ரசிகர்கள் இருக்கும்போது பந்தை ரசிகர்களே பிடித்து மைதானத்திற்குள் வீசுவர். ஆனால் இன்று வீரர்களே கேலரிக்குள் சென்று பந்தை எடுக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதனை வைத்து ரசிகர்கள் இன்று மீம்ஸ்களாக தெறிக்கவிட்டு வருகின்றனர்.