டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய திருச்சி அணியின் தொடக்க வீரர்கள் கே. முகுந்த், முரளி விஜய் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த இணை 98 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், முகுந்த் 32 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த அர்விந்த் அதே ஓவரிலேயே ரன் ஏதுமின்றி வெளியேறினார்.
பின்னர் முரளி விஜய் உடன் ஜோடி சேர்ந்த மணி பாரதி சிறிது நேரம் தாக்குப்பிடித்து 12 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இதனால் திருச்சி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்தது. முரளி விஜய் 66 பந்துகளில் 78 ரன்கள் (8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மதுரை அணியில் ரஹில் ஷா, கிரண் ஆகாஷ் இரண்டு விக்கெட்டும், கவுசிக் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து துரத்தலை தொடங்கிய மதுரை அணியின் தொடக்க வீரர் சரத் ராஜ் 1 ரன்னில் வெளியேறினாலும், அருண் கார்த்திக் பொறுப்புடன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தவிர்த்து ஆதித்யா 15, கேப்டன் சிஜித் 12, கர்ணவர் 6, அபிஷேக் 1 என வரிசையாக வெளியேறினர்.
எனினும் இறுதிகட்டத்தில் உறுதியுடன் ஆடிய ஜெகதீசன் கவுசிக் கடைசி வரை போராடினார். அந்த சூழலில் ஆடடத்தின் இறுதி ஓவரில் மதுரை அணியின் வெற்றிக்கு எட்டு ரன்கள் தேவை என இருந்தது. சஞ்சய் வீசிய அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளில் தலா ஒரு ரன்னும், அடுத்த இரண்டு பந்துகளில் தலா இரண்டு ரன்களும் கிடைத்தது.