தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#PAKvsSL2019: 'எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு! - பத்தாண்டுகளுக்குப் பிறகு பாக்.நடக்கும் முதல் போட்டி! - மூன்று ஒருநாள், மூன்று டி20

கராச்சி: பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 305 ரன்களை இலங்கை அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

#PAKvsSL2019

By

Published : Sep 30, 2019, 10:15 PM IST

Updated : Sep 30, 2019, 10:25 PM IST

பாகிஸ்தானில் பல சிக்கல்களுக்குப் பின் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஃபக்கர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.

பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் ஆசம்

சிறப்பாக விளையாடி வந்த இமாம் உல் ஹக் 31 ரன்களில் ஆட்டமிழ்ந்தார். அதன் பின் சமானுடன் இணைந்த பாபர் ஆசம் ரன்குவிப்பில் ஈடுபட்டார். அதிரடியாக விளையாடி ஃபக்கர் சமான் அரைசதமடித்து அசத்த, அவரைத் தொடர்ந்து பாபர் ஆசமும் அரைசதமடித்து அசத்தினார்.

இதில் 54 ரன்களில் ஃபக்கர் சமான் தனது விக்கெட்டை இழந்து வெளியேற பாபர் ஆசத்துடன் இணைந்த ஹாரிஸ் சோஹைல் அதிரடியில் மிரட்டினார்கள். இப்போட்டியில் பாபர் ஆசம் தனது 11ஆவது சதத்தை பதிவுசெய்து கெத்துகாட்டினார். அதனைத் தொடர்ந்து பாபர் ஆசம் 115 ரன்களில்(8பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ஆட்டமிழந்து வெளியேறினார்.

சதமடித்த மகிழ்ச்சியில் பாபர் ஆசம்

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் ஆசம் 115 ரன்களையும், ஃபக்கர் சமான் 54 ரன்களும், ஹாரில் சோஹைல் 40 ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் ஹசரங்க இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின் 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தற்போது இலங்கை அணியின் தொடக்கவீரர்கள் தனுஷ்கா குணத்திலகா, சதீரா சமரவிக்ரமா விளையாடி வருகின்றனர். தற்போது வரை இலங்கை அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

Last Updated : Sep 30, 2019, 10:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details