தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#PAKvsSL: அபித் அலி அதிரடியில் தொடரை வென்ற பாகிஸ்தான்! - player of the series babar azam

கராச்சி: பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#PAKvsSL

By

Published : Oct 3, 2019, 1:04 AM IST

கராச்சியில் இன்று தொடங்கிய பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் தனுஷ்கா குனத்திலகா அதிரடியாக விளையாடி சதமடித்தார்.

இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 297 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குனத்திலகா 133 ரன்களை விளாசினார்.

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஃபக்கர் சமான், அபித் அலி ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமடித்து அசத்தினர்.

அரைசதமடித்த ஃபக்கர் சமான்

பின்னர் அபித் அலி 74 ரன்களிலும், ஃபக்கர் சமான் 76 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாபர் ஆசம், ஹரிஸ் சோஹைல் ஆகிய இருவருமே அதிரடி ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

அதிரடியாக விளையாடிய ஹரிஸ் சோஹைல் அரைசதமடித்து அசத்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 299 ரன்களை எடுத்தது வெற்றிபெற்றது.

அரைசதமடித்த அபித் அலி

இதன் மூலம் பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற அபித் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:#PAKvsSL2019: 'எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு! - பத்தாண்டுகளுக்குப் பிறகு பாக்.நடக்கும் முதல் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details