இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வந்த இலங்கை அணி, இரண்டாவது ஆட்டநாள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்தது.
#NZvSL: டாம் லதாம் அசத்தல் சதம் - Tom Latham scores century
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் ஆட்டநாள் முடிவில் நியூசிலாந்து அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை எடுத்துள்ளது.
![#NZvSL: டாம் லதாம் அசத்தல் சதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4233413-thumbnail-3x2-tom.jpg)
இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டநாளில், தனஞ்ஜெயா டி சில்வா சிறப்பாக பேட்டிங் செய்து சதம் விளாசினார். அதேசமயம், மறுமுனையில் இருந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், இலங்கை அணி 90.2 ஓவர்களில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிபட்சமாக, தனஞ்ஜெயா டி சில்வா 109 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி நான்கு, டிரன்ட் போல்ட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிவரும் நியூசிலாந்து அணி மூன்றாவது ஆட்டநாள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரரான டாம் லதாம் 111 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருக்கிறார். இவரது அபாரமான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி நிலையான ஸ்கோரை எட்டியுள்ளது.