தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#INDWvSAW: இந்திய மகளிர் அணியை விடாமல் துரத்தும் மழை..! - மழையால் ரத்தான கிரிக்கெட் போட்டிகள்

மழை காரணமாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி கைவிடப்பட்டது.

T20

By

Published : Sep 30, 2019, 8:56 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி ஏழு டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்டத் தொடரில் பங்கேற்றுவருகிறது.இதில், அனைத்து டி20 போட்டிகளும் சூரத்தில் நடைபெறுகிறது. அந்தவகையில், சூரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெறவிருந்த இரண்டாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதால், போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற வேண்டிய மூன்றாவது டி20 போட்டியிலும் மழைக் குறுக்கிட்டது. ஒருகட்டத்திற்கு மேல் மழை நிற்காததால், ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர் அறிவித்தார். இதனால், மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதேசமயம், இம்முறை போட்டி நடைபெறும் என்ற பெரும் எதிர்பார்ப்போடு மைதானத்துக்கு வருகைத் தந்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மகளிர்களுக்கான உலகக்கோப்பை டி20 தொடருக்கு தயாராகும் வகையில், இந்த டி20 தொடர் அமையும் என எதிர்பார்த்தால், மழையின் ஆட்டம் இரு அணிகளையும் ஏமாற்றமடைய செய்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை சூரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியாவது மழையின் குறுக்கீடில்லாமல் நடைபெறுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:மூன்று ஓவர்கள்... மூன்று மெய்டன்... மூன்று விக்கெட்; கெத்து காட்டிய இந்திய வீராங்கனை!

ABOUT THE AUTHOR

...view details