தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#INDvWI: இந்தியா பேட்டிங்; ரோகித் ஷர்மா, அஸ்வினுக்கு கல்தா! - INDvWI

ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் ஷர்மா, அஸ்வின் ஆகியோர் இடம்பெறாதது ரசிகர்களிடம் வருத்தத்தை உருவாக்கியுள்ளது.

#INDvWI

By

Published : Aug 30, 2019, 8:25 PM IST

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20, ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது.

ரோகித் ஷர்மா

இதில், இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், கடைசி போட்டி இன்று ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். முதல் போட்டியில் விளையாடிய அதே 11 வீரர்கள் கொண்ட அணியுடனே கோலி இந்தப் போட்டியிலும் களமிறங்கினார். இதனால் ரோகித் ஷர்மா, அஸ்வின் ஆகியோருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் அணியில் சாய் ஹோப், மிகுவேல் கம்மின்ஸ் ஆகியோருக்குப் பதிலாக ரஹிம் கார்ன்வெல், ஜமார் ஹமில்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்போட்டியின் மூலம், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஹிம் கார்ன்வெல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்யுமா? இல்லை, வெஸ்ட் இண்டீஸ் அணி கம்பேக் தந்து தொடரை சமன் செய்யுமா... என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அஸ்வின்

இந்திய அணி:கோலி(கேப்டன்), கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, மயங்க் அகர்வால், ரிஷப் பந்த், ஜடேஜா, அனுமா விஹாரி, பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி

வெஸ்ட் இண்டீஸ் அணி:ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரைக் பிராத்வெயிட், ஜான் காம்பெல், ஷம்ராஹ் ப்ரூக்ஸ், டேரன் பிராவோ, ராஸ்டான் சேஸ், ஜமார் ஹமில்டன், ரஹிம் கார்ன்வெல், ஷிம்ரான் ஹெட்மயர், கீமோ பவுல், கீமோர் ரோச், ஷெனான் கெப்ரியல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details