ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் அடித்தார். இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனால் 335 ரன்கள் பின்தங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ- ஆன் பெற்றது. இந்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறுகிறது. டி காக், ஹம்சா, டூ பிளஸிஸ், டெம்பா பவுமா, ஹென்ரிச் கிளாசன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மூன்றாம் ஆட்டநாள் முடிகின்ற நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் எட்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி வெற்றிபெற இன்னும் இரண்டு விக்கெட்டுகள் தேவை என்பதால், இன்றைய ஆட்டநாளில் கூடுதலான நேரம் வழங்கப்பட்டது.