தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#INDvSA: நாங்களும் அடிப்போம்... எல்கர் சதம், டூபிளஸ்ஸிஸ், டிகாக் அரைசதம்! - எழுச்சிகண்ட தெ.ஆப்பிரிக்கா - Test match south africa

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க வீரர் எல்கர், டூபிளஸ்ஸிஸ், டிகாக் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி எழுச்சி கண்டுள்ளது.

INDvSA

By

Published : Oct 4, 2019, 3:06 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் அபாரமாக ஆடிய இளம் வீரர் மயாங்க் அகர்வால் 215 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் முதன்முறையாக தொடக்க வரிசையில் களமிறக்கப்பட்ட ரோஹித் சர்மாவும் 176 ரன்கள் குவித்தார்.

அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களை எடுத்திருந்தது. டீன் எல்கர் 27 ரன்களுடனும் டெம்பா பவுமா 2 ரன்னுடனும் களத்திலிருந்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு 29 ரன்கள் சேர்த்த நிலையில் டெம்பா பாவுமா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் தொடக்க வீரர் டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டூபிளஸ்ஸில் நிதான ரன் குவிப்பில் ஈடுபட்டார். இந்த ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை பொறுமையாக எதிர்கொண்டது.

டூபிளஸ்ஸிஸ் - எல்கர் இணை

ஐந்தாவது விக்கெட்டுக்கு இந்த இணை ஐந்தாவது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்த கேப்டன் டூபிளஸ்ஸிஸ் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய குவிண்டன் டி காக்கும் தன் பங்கிற்கு அதிரடி கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தச் சமயத்தில் அமைதியாக மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த எல்கர் ஸ்டைலான சிக்சர் அடித்து இந்தியாவுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் சதத்தையும் சர்வதேச அரங்கில் 12ஆவது டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்தார்.

தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளஸ்ஸிஸின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அஸ்வின்

இந்திய கேப்டன் கோலி அஸ்வின் - ஜடேஜா, இஷாந்த் - சமி என அனைவரையும் பயன்படுத்தினார். ஏன் ரோஹித் சர்மாவையும் பந்துவீச வைத்த கோலியின் யுக்தி எல்கர்-டிகாக் இணை முன்பு தவிடுபொடியானது. இந்த ஜோடி நூறு ரன்களுக்கு மேல் ரன் சேர்த்து அசத்தியது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி தேநீர் இடைவேளைவரை ஐந்து விக்கெட்டுகளை இழந்து 292 ரன்களை எடுத்துள்ளது. எல்கர் 133 ரன்களுடனும் டிகாக் 69 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அந்த அணி இந்தியாவைக் காட்டிலும் 210 ரன்கள் பின்தங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details