இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு தோல்வியும், ஒரு டிராவும் செய்தது. இதனால், இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்யும் நோக்கத்தில் இன்று களமிறங்கியது.
#Ashes: 179 ரன்களுக்கு சுருண்ட ஆஸி - ஆஷஸ் டெஸ்ட்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
#Ashes
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், ஆஸ்திரேலிய அணி 52.1 ஓவர்களில் 179 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுஸ்சாக்னே 74, வார்னர் 61 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.