2018இல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், பென்கிராஃப்ட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கினர். இதனால் ஓராண்டு தடைக்குப் பிறகு தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர்.
இந்தத் தொடருக்கு முன்னதாக, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் வார்னர் 647 ரன்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார். அதேசமயம், ஸ்டீவ் ஸ்மித் 379 ரன்கள் விளாசி 13ஆவது இடத்தில் இருந்தார். இதனால், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வார்னர் தனது ரன் வேட்டையை தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
வார்னரின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள் ஆனால், வார்னரோ சொல்லி வைத்ததை போல பிராட், ஆர்ச்சர் பந்துவீச்சில் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். மறுமுனையில், ஸ்டீவ் ஸ்மித் ஒவ்வொரு போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார். ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது ஐந்தாவது போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை ஒன்பது இன்னிங்ஸில் விளையாடிய வார்னர் 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழக்கும் வார்னர் அதில் ஒருமுறை மட்டுமே அரைசதம் விளாசினார். ஏனைய எட்டு இன்னிங்ஸிலும் அவர் சிங்கில் டிஜிட் ரன்னில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். மறுமுனையில், ஸ்டீவ் ஸ்மித் ஆறு இன்னிங்ஸில் மட்டுமே விளையாடி ஒரு இரட்டை சதம், இரண்டு சதம், மூன்று அரைசதம் என 751 ரன்களை குவித்துள்ளார்.
இரட்டைச் சதம் அடித்த மகிழ்ச்சில் ஸ்மித் இதுமட்டுமில்லாமல், அவர் இந்தத் தொடரில் 85 பவுண்ட்ரிகளை விளாசியுள்ளார். இது வார்னர் இந்தத் தொடரில் அடித்த ரன்களை விட ஒன்று அதிகம் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. இரண்டு வீரர்களும் இந்தத் தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஎண்ட்ரி தந்தனர். ஆனால், ஒருவருக்கு மறக்க முடியாத வகையிலும், மற்றொருவருக்கு மறக்க வேண்டிய தொடரகாவும் அமைந்திருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸிலாவது வார்னர் குறைந்தது டபுள் டிஜிட் ரன் அடிப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.