இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸில் நடைபெறவுள்ளது.
சிவப்புமயமாகப் போகிறது லார்ட்ஸ்! - Ashes
நுரையீரல் புற்றுநோய் விழப்புணர்வுக்காக, ஆஷஸ் டெஸ்ட் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் சிவப்பு நிற உடையில் வரவுள்ளனர்.
![சிவப்புமயமாகப் போகிறது லார்ட்ஸ்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4128501-thumbnail-3x2-lords.jpg)
இந்நிலையில், முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூவ் ஸ்ட்ராஸ் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூத் ஸ்ட்ராஸ் என்ற அறக்கட்டளையை நடத்திவருகிறார். இதனால், நுரையீரல் புற்றுநோய் விழப்புணர்வுக்காக இரு அணிகளும் சிவப்பு நிற தொப்பி, ஜெர்சியில் கருப்பு நிறத்துக்கு பதிலாக சிவப்பு நிற எண்களுடன் விளையாடவுள்ளனர். அதேபோல், இப்போட்டியைக் காணவரும் ரசிகர்களும் சிவப்பு நிற உடையில் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆண்ட்ரூவ் ஸ்ட்ராஸின் மனைவி கடந்த ஆண்டு நுரையீரல் புற்றநோயால் உயரிழந்தார். இதனால், அவர் தனது மனைவியின் பெயரில் நுரையீரல் புற்றுநோய் அறக்கட்டளை தொடங்கினார். தனது அறக்கட்டளை மூலம், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உதவி வருகிறார்.