தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மன அழுத்தத்தால் மற்றொரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் தற்காலிக ஓய்வு! - மகளிர் பிக் பேஷ் லீக்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிக் பேஷ் லீக்கிலிருந்து மன அழுத்தம் காரணமாக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் சோபி மோலினக்ஸ் தற்காலிக ஓய்வு பெற்றுள்ளார்.

Aussie cricketer takes break over mental health

By

Published : Nov 22, 2019, 12:18 PM IST

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் மன அழுத்தம் காரணமாக காலவரையற்ற தற்காலிகமாக ஓய்வு பெற்றுள்ளார்.. அவரைத் தொடர்ந்து நிக் மேடிசனும் இதே காரணத்தால் ஓய்வு எடுத்துள்ளார்.

தற்போது அந்த வரிசையில் மேலும் ஒரு ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் இணைந்துள்ளார். ஆனால் தற்போது அந்த வரிசையில் இணைந்தவர் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் ஆல் ரவுண்டர் சோபி மோலினக்ஸ் .

இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் 'பிக் பேஷ்’ லீக்கில் மெல்போர்ன் அணிக்காக விளையாடி வந்தார். 21 வயதே ஆன சோபி மொலினக்ஸ் மன அழுத்தம் காரணமாக பிக் பேஷ் லீக்கிலிருந்து விடுப்பு எடுத்துகொள்வதாக இன்று அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: T10 league: ருத்தரதாண்டவமாடிய பான்டன் - அசத்தல் வெற்றி கலந்தர்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details