ஸ்டீவ் ஸ்மித்தின் ஓராண்டு தடை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2018ஆம் ஆண்டு முதல் வலம்வருபவர் டிம் பெய்ன். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும் 35 ஒருநாள், 12 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்நிலையில் டிம் பெய்ன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வருகிற பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே எனது கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தும் டிம் பெய்ன் மேலும் அவர் கூறுகையில், "நான் மனதளவிலும் உடலளவிலும் நன்றாகத்தான் உள்ளேன். ஆனலும் எனது வயது காரணமாக என்னால் வெகுகாலம் கிரிக்கெட்டில் நீடிக்க இயலாது. அதனால் வருகிற கோடைக்காலமே எனது கடைசி டெஸ்ட் பயணமாகவும் இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற 21ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் டிம் பெய்ன் செய்தியாளர்களிடையே கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.
இதையும் படிங்க: கடைசி பந்தில் 5ரன்கள் தேவை... வெச்சுக்கோ சிக்ஸ்... ஆஸி. வீராங்கனையின் நச் ஃபினிஷ்!