இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால், கரோனா வைரஸ் எதிர்ப்புக்கு நிதி திரட்டும் விதமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பரிந்துரைத்திருந்தார்.
வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் எங்களுக்கு பணம் முக்கியமில்லை என அக்தரின் கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கபில்தேவ், சுனில் கவாஸ்கர் ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் இன்ஸ்டாகிராமில் நடைபெற்ற ஒரு நேரலையின் போது, பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதை நான் ஒருபோதும் விரும்பியது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், நாங்கள் பாகிஸ்தானுடன் நல்லுறவில் இல்லை. எனவே இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கே நாங்கள் முதலிடம் கொடுப்போம். தனிப்பட்ட முறையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படாவிட்டால், நான் பாகிஸ்தானுக்கு எதிராக எந்தப் போட்டியையும் இந்தியா விளையாடுவதற்கு ஆதரவாக இருக்கமாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீ சாந்த் இந்திய அணி டி20, ஒரு நாள் உலகக்கோப்பைகளை வென்ற அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்த், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா வைரஸுக்கு மத்தியில் கால்பந்து திறமையை வெளிப்படுத்தும் க்ளூவர்ட்!