இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை துரத்திய அறிமுக வீரர் இஷான் கிஷான், கேப்டன் விராட் கோலி இணை அதிரடியாக விளையாடி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தனர். மேலும் அறிமுக போட்டியிலேயே அதிரடியாக விளையாடி இஷான் கிஷான் ஆட்டநாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் கூறுகையில், “இஷான் கிஷானின் அச்சமற்ற பேட்டிங்கை நான் மிகவும் விரும்பினேன். உங்கள் அறிமுக போட்டியில் இப்படி அதிரடியாக பேட்டிங் செய்வது எளிதல்ல.