அமேஸான் ப்ரைம் சார்பாக தி டெஸ்ட் என்ற ஆவணப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பின் ஆஸ்திரேலியா அணி எவ்வாறு மீண்டது, உலகக்கோப்பைத் தொடரின்போது ஆஸ்திரேலிய அணியின் மனநிலை, ஆஷஸ் தொடர் என பல்வேறு விஷயங்கள் பற்றி ஆஸ்திரேலிய வீரர்கள் பகிர்ந்துள்ளனர்.
அதில் ஆஷஸ் தொடரின்போது ஸ்டீவ் ஸ்மித் - ஜோஃப்ரா ஆர்ச்சர் இருவருக்குமிடையே மிகப்பெரிய போட்டி உருவானது. இருவரில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்ற போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்துவம் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு சென்று சேர்ந்தது. ஒரு நல்ல பேட்ஸ்மேனுக்கும், நல்ல பந்துவீச்சாளருக்கும் இடையே எழும் போட்டியால்தான் இன்று வரை கிரிக்கெட் விளையாட்டு சுழன்று கொண்டிருக்கிறது. அதுமீண்டும் களத்தில் நிரூபிக்கப்பட்டது.
அந்தத் தொடரின்போது ஆர்ச்சர் வீசிய ஒரு பவுன்சர் ஸ்டீவ் ஸ்மித் தலையில் அடித்தது. இதனால் ஸ்டீவ் ஸ்மித் களத்திலேயே கீழே விழுந்தார். அந்த நிமிடம் பற்றி ஆஸ்திரேலிய வீரர் வார்னர் பேசுகையில், '' ஸ்டீவ் கீழே விழுந்தபோது, மீண்டும் அது நடந்துவிடக்கூடாது என்று அனைவருமே வேண்டினோம். உண்மையை சொல்லவேண்டுமென்றால் அனைவருமே பதற்றம் கொண்டோம். அந்த நிமிடம் எங்கள் அனைவரையும் பயமுறுத்தியது.