கிரிக்கெட் வரலாற்றின் அடுத்த பரிமானமான டி10 லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று தொடங்கிய சீசனின் முதல் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான மராத்தா அரபியன்ஸ் அணி டேரன் சமி தலைமையிலான நார்த்தன் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அரபியன்ஸ் அணி தொடக்கத்தில் ஆடம் லித், கிறிஸ் லின் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங்கும் ஆறு ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அதன்பின் துசன் ஷனக்க, வால்டனின் அதிரடியால் அரபியன்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களை எடுத்தது. வாரியர்ஸ் அணி தரப்பில் கிறிஸ் வூட், ரஸ்ஸல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.