இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி, கான்பெர்ரா கிரிக்கெட் மைதானத்தில் நாளை (டிச.01) நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆஸி., அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் ஃபார்ம் குறித்து கவலைக்கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஃபின்ச், "இந்திய அணியுடனான தொடரில் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடந்த எட்டு அல்லது ஒன்பது வருடங்களில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது பங்களிப்பை நாம் அவ்வளவு எளித்தில் மறந்துவிட முடியாது. அதனால் அவரது ஃபார்ம் குறித்து கவலைக்கொள்ளத் தேவையில்லை.
அவர் இன்னிங்ஸின் தொடக்க ஓவர்களை வீசுவதற்கு விரும்புகிறார். ஆனால் நாங்கள் இமாலய இலக்குகளை நிர்ணயித்துள்ளதால் இந்தியா போன்ற அணி வீரர்கள் தொடக்கம் முதலே அடித்து ஆட விரும்புகின்றனர். அதன் காரணமாகவே ஸ்டார்கின் ஓவர்களில் ரன்கள் அதிகாமாக தரப்பட்டிருந்தது.
அதனால் நாளையப் போட்டியின்போது அணியில் ஒரு சில மாற்றங்களை கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆனால் ஸ்டார்க் குறித்து யாரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை. அவர் எங்கள் அணியின் சிறந்த பந்துவீச்சாளர் என்பது நாங்கள் அறிந்த ஒன்றே.