தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

காயம் ஏதுமின்றியும் பும்ராவுக்கு ஓய்வு! - இந்தியா இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள், டி20 போட்டிகளிலிருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

No injury issues, Bumrah gets rest ahead of big season
No injury issues, Bumrah gets rest ahead of big season

By

Published : Mar 2, 2021, 10:32 PM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட காரணங்களினால் விலகினார்.

மேலும் இது குறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில், "ஐபிஎல் தொடர் முதல் ஜஸ்பிரித் பும்ரா ஓய்வின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடரில் விளையாடிவருவதால் அவருக்கு ஒருநாள், டி20 தொடரில் ஓய்வளிக்கப்படுகிறது.

மேலும், தனிப்பட்ட காரணங்களினால் நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ள பும்ராவிற்கு பிசிசிஐ எப்போது ஆதரவாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக 2019ஆம் ஆண்டு காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா நான்கு மாதங்களுக்கு மேல் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். அதன்பின் காயத்திலிருந்து மீண்டுவந்த அவர் 2020ஆம் ஆண்டு ஜனவரி நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்று விளையாடினார்.

அதன்பின் கரோனா ஊரடங்கினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்த பும்ரா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 13ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாலையோரக் கடையில் உணவு உண்ட பாண்டியா: வைரல் காணொலி

ABOUT THE AUTHOR

...view details