2019 அக்டோபர் மாதத்திலிருந்து 2020 செப்டம்பர் மாதம் வரையிலான இந்திய அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 27 வீரர்களின் ஒப்பந்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதில் முதன்மையாக ஏ+ கிரேடில் (ரூ.7 கோடி) இந்திய அணி கேப்டன் விரட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையடுத்து இரண்டாம் நிலையான ஏ கிரேடில் (ரூ.5 கோடி)ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், புஜாரா, அஜிங்கியா ரஹானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் ஆகிய 11 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மூன்றாவது நிலையான பி கிரேடில் (ரூ.3 கோடி)விருதிமான் சாஹா, உமேஷ் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, மயாங்க் அகர்வால் ஆகிய 56 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். நான்காம் நிலையான சி கிரேடில் (ரூ.1 கோடி)கேதார் ஜாதவ், சைனி, தீபக் சஹார், மனீஷ் பாண்டே, விஹாரி, ஷர்துல் தாகூர், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 8 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.