இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்களும், பொதுமக்களும் போராடிவருகின்றனர். ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, காவல் துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின்போது, மாணவர்கள் பலரும் சேர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பனியன்களை அணிந்து போராடியுள்ளனர். அந்த பனியன்களில், '' No NRC, NO NPR, NO CAA'' எனப் எழுதப்பட்டிருந்தது.