இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 6ஆம் தேதி சிட்னியில் நடைபெற்றவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் மெல்போர்னில் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, சுப்மன் கில், பிரித்வி ஷா ஆகியோர் உணவகத்திற்குச் சென்றுள்ளனர். மேலும் அவர்களுக்கு அருகே அமர்ந்திருந்த ரசிகர், இந்திய அணி வீரர்களின் உணவிற்குப் பணம் செலுத்தியதை அடுத்து, ரிஷப் பந்து அந்நபரைக் கட்டித் தழுவியதாக ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியாகின.
கரோனா விதிகளை மீறி உணவகத்திற்குச் சென்ற இந்திய வீரர்கள் இதைத்தொடர்ந்து இந்திய அணியின் வீரர்கள், ஆஸ்திரேலியாவின் கரோனா பாதுகாப்புச் சூழலை மீறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதன்பின் அந்த ரசிகர், கிரிக்கெட் வீரர்களின் உணவுக்கான தொகையை மட்டுமே தான் செலுத்தியதாகவும், ரிஷப் பந்த் தன்னை கட்டித்தழுவினார் என்பது பொய்யானது என்றும் தெரிவித்தார்.
கரோனா விதிகளை மீறி உணவகத்திற்குச் சென்ற இந்திய வீரர்கள் இது குறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில், “இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி நன்றாகத் தெரியும். அதனால் அவர்கள் எந்தவொரு விதிமீறலிலும் ஈடுபடவில்லை.
இருப்பினும் அவர்கள் மீது வீசாரணை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவிடம் ஆஸ்திரேலிய அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து, அந்நாட்டின் சில ஊடகங்கள் இந்தியாவின் மீது பழிசுமத்தும் வகையிலேயே இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பியுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து கரோனா விதிகளை மீறிய ரோஹித் சர்மா, சுப்மன் கில், நவ்தீப் சைனி, ரிஷப் பந்த், பிரித்வி ஷா ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:'புத்தாண்டு, புதுப்பிக்கப்பட்ட ஆற்றல்' - 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இந்தியா!