நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கிய கடைசி டெஸ்ட் போட்டியில் (இரண்டாவது) முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய வீரர்களான பிரித்வி ஷா (54), புஜாரா (54), ஹனுமா விஹாரி (55) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பச்சைபசேலேன காட்சியளித்த கிறிஸ்ட்சர்ச் பிட்ச், பந்துவீச்சில் ஸ்விங்கிற்கும், வேகத்திற்கும் நன்கு ஒத்துழைத்ததால்தான் இந்திய வீரர்கள் ரன் அடிக்க முடியவில்லை என பல்வேறு தரப்பினர் கருத்துகளைக் கூறிவருகின்றனர்.
இது குறித்து இந்திய வீரர் ஹனுமா விஹாரி கூறுகையில், "ஆட்டத்தின் தொடக்கத்தில் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடியது அணிக்குச் சாதகமாக அமைந்தது. அதன்பின் புஜாராவின் அனுபவம் இந்திய அணிக்கு கைகொடுத்தது. நாங்கள் (பிரித்வி ஷா,புஜாரா) தவறான நேரத்தில் எங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டோம். வெலிங்டன் டெஸ்டை விட இப்போட்டியில் நாங்கள் சிறப்பாகத்தான் பேட்டிங் செய்தோம். நிச்சயம் 300 ரன்கள் அடித்திருக்க வேண்டிய ஆடுகளத்தில் இந்தியா 242 ரன்கள்தான் அடித்தது. இதற்கு பிட்ச் காரணமல்ல பேட்ஸ்மேன்களின் தவறான ஷாட் தேர்வுதான் காரணம்" என்றார்.
இதையும் படிங்க:டிம் சவுதியிடம் 10 முறை அவுட்டான ரன் மெஷின்