நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மௌங்கனுய்யில் வியாழனன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்தது.
அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணியின் நிக்கோலஸ் ஹென்ரி 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின் களமிறங்கிய காலீன் டி கிராண்ட்ஹோம், வாட்லிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தத் தொடங்கியது. சிறப்பாக விளையடிய இருவரும் அரைசதமடிக்க நியூசிலாந்து அணி 300 ரன்களை எட்டியது. இதில் கிராண்ட்ஹோம் 65 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.