நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இதன் மூலம் நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் டிரண்ட் போல்ட் காயம் காரணமாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.